முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கடம்பூர்ராஜூ வழங்கினார்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் எம்.ரவி குமார், தலைமையில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு 4 பயனாளிகளுக்கு சுய தொழில் புரிய மானியத்துடன் கூடிய கடன் ரூ.40,000-மும், 6 பயனாளிகளுக்கு ரூ.22,020 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், 4 பயனாளிகளுக்கு மாதம் தலா ரூ.1500 மாத பராமரிப்பு உதவித்தொகை ஆணை மற்றும் 54 மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களுக்காக அனைத்து நலத்திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் உடல் தகுதியினை 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டார்.மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 15க்கு மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முகாமில் 1000க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மேலும், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு என பசுமை வீடுகள், இலவச பேரூந்து பயண அட்டை, மூன்று சக்கர வாகனம், தேசிய அடையாள அட்டை, உதவித்தொகை, இலவச பட்டா, மடக்கு நாற்காலி, ஊன்றுகோல், காதொளி கருவி போன்றவை வழங்கி வருகிறது. தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை, இங்கே புகைப்படம் எடுக்கப்பட்டு உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு மனுக்களுடன் வந்தால் போதும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் வழங்கபடும். என்றார். இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தரராஜ், தூத்துக்குடி வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்ஜெகவீரபாண்டியன், கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா, வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன், அதிமுக கோவில்பட்டி பெருநகரகழக செயலாளர் எஸ்.விஜயபாண்டியன், ஒன்றியசெயலாளர் அய்யாத்துரைபாண்டியன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் பொன்ராஜ், மாவட்ட விவசாயஅணி செயலாளர் ராமச்சந்திரன், அம்மாபேரவை ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரபாண்டியன், வண்டாணம் கருப்பசாமி, அம்மாபேரவை மகாலட்சுமிசந்திரசேகர், முன்னாள் வைஸ்சேர்மன் ராமர், அம்பிகா வேல்மணி, நாலாட்டின்புத்தூர் அய்யனுராஜ், பாண்டவர்மங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், அம்மாபேரவை கடலையூர்ரோடு செண்பகமூர்த்தி, மாவட்ட துணைசெயலாளர் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், காந்திநகர் 1வது வார்டு செயலாளர் மாடசாமி, 36வார்டு செயலாளர் வைகுண்டபாண்டியன், மாவட்டபிரதிநிதி பொன்னுச்சாமி, நகர மாணவரணி நகரசெயலாளர் எல்.எஸ்.பாபு, பீவி. சீனிவாசன், அம்மா பேரவை பாலாஜி, அம்மா பேரவை சந்திரசேகர் . இளைஞர் பாசறை பழனிக்குமார், மாதவன், எஸ்.கே.மாயா, சிவகாடு பாலமுருகன், அமைப்புசாரா அணி விஜயக்குமார், டிரைவர் செல்லையா, மாவட்ட இணைசெயலாளர் கலைவாணி கோவிந்தராஜன், நிலவளவங்கி தலைவர் கணபதிபாண்டியன், இயக்குனர் ஜெமினி, புதுகிராமம் ஆரோக்கியராஜீ, எம்ஜீஆர் மன்றம் குருநாதன், ஆ. கணேசன், அம்மாபேரவை சந்திரசேகர், வானரமூட்டி அலங்காரபாண்டியன், வழக்குரைஞர்கள் சங்கர்கணேஷ், விஜயபாஸ்கர் 28வது வார்டு செயலாளர் மாரிச்சாமி, 29வது வார்டு நகர கூட்டுறவு வங்கி கடன்சங்கதலைவர் மாரியப்பன், கூட்டுறவு பால்சொஸைட்டி தலைவர் வெள்ளத்துரை, பெரியசாமி பாண்டியன், ஆபிரகாம்அய்யாத்துரை, கேண்டீன்நைனா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago