முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      தமிழகம்
Amarnath-Krishnan-2025-07-1

சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. நான் கண்டுபிடித்ததை திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன் என்று ஆய்வாளர் அமர்நாத்  தெரிவித்துள்ளார்.

கீழடியில் ஆய்வு மேற்கொண்டு கி.மு.8 நூற்றாண்டில் என்னென்ன பயன்படுத்தப்பட்டது. அந்த கால மக்களின் நாகரிகம், விவசாயம், விலங்குகள், கலாசாரம் பழக்கவழக்கம் எப்படி இருந்தது, இரும்பு பயன்படுத்தியது என அமர்நாத் ஐ.ஏ.எஸ். கண்டுபிடித்து, இந்திய தொல்லியல் துறைக்கு ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

அந்த ஆய்வு அறிக்கையை கி.மு 3 ஆம் நூற்றாண்டு என திருத்துமாறு மத்திய அரசு, அமர்நாத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. கீழடி தொல்லியல் ஆய்வு பொறுப்பாளராக ஸ்ரீராம் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் 3ஆம் கட்ட அகழாய்வு நடத்தி, அமர்நாத் குறிப்பிடும் படியான கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லை என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமர்நாத், ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. நான் கண்டுபிடித்ததை திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன்.

நான் தாக்கல் செய்த 982 பக்கங்களில் எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்த தயாராக இருக்கிறேன். ஆனால் உண்மையை திரித்து எழுத முடியாது. கி.மு 8ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததை கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தவை என மத்திய அரசு மாற்ற வலியுறுத்துகிறது. நான் கண்டுபிடித்த விஷயங்களையே மாற்றச் சொன்னால் கீழடியின் தொன்மையை சிதைக்கும் செயலாகும்.

சிந்து சமவெளி நாகரீகம், வேத காலம், மவுரிய, ஹர்ஷவர்தன் காலத்தையே மத்திய அரசு பேசி வருகிறது. ஆனால் சங்க கால வரலாற்றை பற்றி ஏன் மத்திய அரசு ஆய்வு செய்யவில்லை. இவ்வாறு அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து