எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் லாஸ் வேகாஸில் நேற்று நடைபெற்ற 4வது சுற்றில் நம்பர் 1 வீரரான மார்க்ஸ் கார்ல்சன் ( நார்வே ), பிரக்ஞானந்தா ( இந்தியா ) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடினார் . சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார் . இதனால் 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார்
இளையோர் முதல் டெஸ்ட் டிரா
இந்தியா -இங்கிலாந்து ஜூனியர் கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெக்கன்ஹாமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 540 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 439 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
பின்னர் 101 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 350 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 4-வது மற்றும் கடைசி நாளில் 7 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செல்ம்ஸ்போர்டில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.
அதிகம் யோசிக்கவில்லை: தீப்தி
இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நேற்று முன்தினம் (ஜூலை 16) தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்த தீப்தி சர்மா, ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை என தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை பொருத்தவரையில், ஒரு அணியாக இலங்கை மற்றும் இந்தியாவில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. அதனால், உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை. ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார். ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
ஆஸி. வீரர்கள் ஆதிக்கம்
கிரிக்கெட் உலகில் அதிகமான உலகக் கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தி வருகிறது. கடந்த 2021- 23 சீசன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸி. சமீபத்தில் 2023-25 சீசனில் தென்னாப்பிரிக்காவிடம் இறுதிப் போட்டியில் தோற்றது. தற்போது, மேற்கிந்தியத் தீவுகளுடன் உடனான டெஸ்ட் தொடரில் 3-0 என அபாரமாக வென்றது. குறிப்பாக, கடைசி டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. அதில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை கடைசி இன்னிங்ஸில் 27 ரன்களுக்கு சுருட்டி ஆதிக்கம் செலுத்தியது.
இந்நிலையில், ஐ.சி.சி. தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆஸ்திரேலியாவின் 5 பந்துவீச்சாளர்கள் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் டாப் 10-க்குள் இடம் பிடித்துள்ளார்கள். ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை வருமாறு., 1. ஜஸ்ப்ரீத் பும்ரா - 901 புள்ளிகள் (இந்தியா),2. ககிசோ ரபாடா - 851 புள்ளிகள் (தென்னாப்பிரிக்கா), 3. பாட் கம்மின்ஸ் - 838 புள்ளிகள் (ஆஸ்திரேலியா),
4. ஜோஷ் ஹேசில்வுட் - 815 புள்ளிகள் (ஆஸ்திரேலியா), 5. நோமன் அலி - 806 புள்ளிகள் (பாகிஸ்தான்), 6. ஸ்காட் போலண்ட் - 784 புள்ளிகள் (ஆஸ்திரேலியா), 7. மாட் ஹென்றி - 782 புள்ளிகள் (நியூசிலாந்து), 8. நாதன் லயன் - 769 புள்ளிகள் (ஆஸ்திரேலியா),
9. மார்கோ யான்சென் - 767 புள்ளிகள் (தென்னாப்பிரிக்கா), 10. மிட்செல் ஸ்டார்க் - 766 புள்ளிகள் (ஆஸ்திரேலியா).
மே.இ.தீவுகள் வீரர் ரஸல் ஓய்வு
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 2019 முதல் விளையாடி வரும் ஒரே மூத்த வீரரான ரஸல் (வயது 37) ஜமைக்காவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருடன் ஓய்வுபெறவுள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், ரஸலின் ஓய்வு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இவர், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 84 டி20, 56 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஓய்வு தொடர்பாக ரஸல் தெரிவித்ததாவது: ”மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என் வாழ்க்கையில் பெருமைமிக்க சாதனைகளில் ஒன்றாகும். வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த நிலைக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சொந்த மண்ணில் விளையாட விரும்புகிறேன். கரீபிய மண்ணில் இருந்து வரும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் அதே வேளையில், எனது சர்வதேச வாழ்க்கையை உயர்வாக முடிக்க விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல்., பி.பி.எல்., பி.எஸ்.எல். போன்ற லீக் தொடர்களில் ரஸல் தொடர்ந்து விளையாடவுள்ளார்.
இளம் வீரருக்கு மெஸ்ஸியின் ஜெர்ஸி
பார்சிலோனா அணியின் புதிய நம்.10 ஜெர்ஸி இளம் வீரர் லாமின் யமாலுக்கு வழங்கப்பட்டது. ஸ்பெயினைச் சேர்ந்த லாமின் யமால் (18 வயது) பார்சிலோனா அணிக்காக 2023ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். பார்சிலோனா அணியில் ஃபார்வேடாக விளையாடும் லாமின் யமால் 25 கோல்கள், 34 அசிஸ்ட்ஸ் செய்துள்ளார். ஸ்பெயினின் தேசிய அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
மெஸ்சியின் எண்ணான நம்.10 கொண்ட ஜெர்ஸியை தற்போது லாமின் யமாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. பார்சிலோனா அணியில் லாமின் யமாலுக்கு 6 ஆண்டுகள் (2031 வரை) ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட லாமின் யமால் தனது பாட்டியை அழைத்து வந்தார். முதன்முதலாக பார்சிலோனாவின் பயிற்சி கூடமான லா மசியாவில் இவரைச் சேர்த்ததுமுதல் இவரது பாட்டி உடன் இருந்திருக்கிறார். அதனால், அவரை வரவழைத்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார். பார்சிலோனா அணிக்கு அடுத்த மெஸ்ஸியாக வருவார் என ரசிகர்கள் இவரது திறமையைப் பார்த்துப் புகழ்ந்து வருகிறார்கள்.
டெஸ்ட் தரவரிசையில் ஜோ ரூட் முதலிடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (888 புள்ளி) மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் சதம் (104 ரன்) அடித்ததன் மூலம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.. இதே டெஸ்டில் 11 மற்றும் 23 ரன் வீதம் எடுத்து சொதப்பிய புரூக் 862 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (867 புள்ளி) 2-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
இந்திய வீரர்களான ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்திலும் (801 புள்ளி), ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு), கேப்டன் சுப்மன் கில் 9-வது இடத்திலும் (3 இடங்கள் பின்னடைவு) உள்ளனர். அதே சமயம் லார்ட்ஸ் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய ரவீந்திர ஜடேஜா 5 இடங்கள் உயர்ந்து 34-வது இடத்தையும், முதல் இன்னிங்சில் சதமடித்த லோகேஷ் ராகுல் 5 இடங்கள் அதிகரித்து 35-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 18 hours ago |
-
சீன அதிபரின் பேச்சு: அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா?
31 Aug 2025பெய்ஜிங் : டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சீன அதிபரின் பேச்சு அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-08-2025
31 Aug 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு
31 Aug 2025சென்னை : ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் : பிரதமர் மோடியிடம் சீன அதிபர் வலியுறுத்தல்
31 Aug 2025பெய்ஜிங் : டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் சீன அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
-
பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 94.29 ஏக்கர் நிலம் மீட்பு : தமிழக அரசு தகவல்
31 Aug 2025சென்னை : பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 94.29 ஏக்கம் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தெருநாய் வழக்கு என்னை பிரபலமாக்கியது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் பேச்சு
31 Aug 2025டெல்லி : தெருநாய் வழக்கு என்னை பிரபலமாக்கியதாத சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் தெரிவித்துள்ளார்.
-
விஜய் சுற்றுப்பயணம்: மாவட்ட செயலாளர்களுக்கு த.வெ.க. உத்தரவு
31 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால் ஆதரவு கேட்க தயார்: சுதர்சன் ரெட்டி
31 Aug 2025ராஞ்சி : பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால் அவர்களிடம் ஆதரவு கேட்க தயார் என்று சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் 4-ம் தேதி நடக்க இருந்த ஓ.பி.எஸ். மாநாடு ஒத்திவைப்பு
31 Aug 2025சென்னை : மதுரையில் வருகிற 4-ம் தேதி நடக்க இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதல்வர்: தொடர்ந்து முதலிடத்தில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்
31 Aug 2025புதுடெல்லி : இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல்வர் யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உ
-
2 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
31 Aug 2025சென்னை : 2 நாள் பயணமாக நாளை ஜனாதிபதி திரெளபதி முர்மு தமிழகம் வருகிறார்.
-
தமிழ்நாட்டின் பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்
31 Aug 2025சென்னை : தமிழகத்தின் காவல் துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு ) ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு விண்ணப்பம் செய்த தன்கர்
31 Aug 2025ஜெய்ப்பூர் : ராஜினாமா ஏற்படுத்திய பரபரப்புக்கு இடையே எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு ஜெகதீப் தன்கர் விண்ணப்பம் செய்துள்ளார்.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு விவகாரம்: ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். கடிதம்
31 Aug 2025சென்னை : அமெரிக்காவின் தற்போதைய கூடுதல் வரி விதிப்பால் நம் நாட்டில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில், மற்ற நாடுகளு
-
இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன:மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேதனை
31 Aug 2025புதுடெல்லி : பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார்.
-
கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு மீது இன்று விசாரணை
31 Aug 2025புதுடெல்லி : கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம் தொடர்பான அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
-
இந்த மாதம் 2-ம் வாரத்தில் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி?
31 Aug 2025புதுடெல்லி : இந்த மாதம் (செப்டம்பர்) 2-ம் வாரத்தில் பிரதமர் மோடி இம்பால் மற்றும் சூரசந்த்பூர் மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ட்ரம்ப்பின் இந்திய பயணம் ரத்து?
31 Aug 2025வாஷிங்டன் : குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிற்கு டிரம்ப் வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிரம்ப்பின் இந
-
மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் 50 பி.எஸ்சி. நர்சிங் கூடுதல் இடங்கள்
31 Aug 2025மதுரை : மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
-
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது
31 Aug 2025புதுடெல்லி : பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நான்கு நாட்களிலேயே பாகிஸ்தான் மண்டியிட்டது: இந்திய விமானப்படை
31 Aug 2025புதுடெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா மே மாதம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் கு
-
பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
31 Aug 2025சென்னை : பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்க
-
டெல்லியில் பறவைக்காய்ச்சல் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்
31 Aug 2025புதுடெல்லி : 2 நாட்களுக்கு முன்பு 2 வண்ண நாரைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை டெல்
-
அமெரிக்க வரி விதிப்பால் கோவையில் 35 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
31 Aug 2025கோவை : அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி தற்போது அமலுக்கு வந்துள்ளது.
-
இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை - ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடி அறிவிப்பு
31 Aug 2025பெய்ஜிங் : சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.