மூச்சுப் பயிற்சி, தினமும் உடற்பயிற்சி மூலம் ஆஸ்துமா கட்டுப்படுத்தலாம்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      வாழ்வியல் பூமி

காற்று மாசுபடுதல், மக்களின் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் பல காரணங்களால் இந்தியாவில் நாள்தோறும் பலதரப்பட்ட நோய்கள் பெருகி வருகின்றன. பெரும்பாலான சுவாச நோய்களுக்கு விழிப்புணர்வு இல்லாததே முதன்மை காரணமாக உள்ளது. உலக சுகாதார மையத்தின்படி 300 மில்லியனுக்கும் அதிகமானோர் தற்போது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்தியாவை பொருத்தவரை 15-20 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவினால்  பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 17 சதவீத மக்கள் ஆஸ்துமாவினால் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளில் 5-11 வயதுள்ளவர்களில் 15 சதவீதம் பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர்.வேல்குமார் தெரிவித்தார்.