முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் ராஜீவ் காந்தி நினைவு ஜோதிக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு:

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகருக்கு ராஜீவ் ஜோதி யாத்திரையின் மூலம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட ராஜீவ் காந்தி நினைவு ஜோதிக்கு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.ஜெயராம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் எஸ்.எஸ்.பிரகாசம்.இவர் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக ஆண்டு தோறும் ராஜீவ் ஜோதி யாத்திரை நடத்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் கட்சித் தொண்டர்களுடன் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் 26வது ஆண்டு ராஜீவ் ஜோதி யாத்திரையை கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கடந்த 15ம் தேதி பெங்களுருவில் தொடங்கி வைத்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் திருமங்கலம் நகருக்கு கர்நாடக காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வருகை புரிந்த ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.ஜெயராம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.அப்போது ராஜீவ் காந்தி நினைவு ஜோதியை பெற்றுக் கொண்ட மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராம் அதனை திருமங்கலம் நகரில் முக்கிய வீதிகளில் வழியே கட்சியினர் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் சென்று யாத்திரை குழுவினரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.இந்நிகழச்சியில் மாவட்ட துணைத் தலைவர் பிரிதிவிராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago