முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வதந்திகளை நம்ப வேண்டாம்: பஞ்சாப் முதல்வர் மான் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
Bahavanth-maan 2023-06-01

Source: provided

சண்டிகர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் வெடிகுண்டு, ட்ரோன். ஏவுகணை ஆகியவற்றை கண்டாலோ அல்லது அதன் பாகங்கள் தென்பட்டாலோ அதனருகே விரைந்துச் செல்ல வேண்டாம் உடனடியாக மக்கள் காவல்துறை அல்லது ராணுவத்திற்கு உரிய தகவல் அளிக்கவும். அவர்கள் அங்கு வந்து அதைச் செயலிழக்கச் செய்வார்கள். மேலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்றுவரும் பதற்றநிலையைக் கண்டு மக்கள் பீதியடையவோ, வதந்திகளை நம்பவோ வேண்டாம்.

ராணுவம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு முறை தகவல் தெரிவித்து வருகிறது. இக்கட்டான சூழல் ஏற்படும் பட்சத்தில் மக்கள் தங்குவதற்கும், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்க அரசு தயாராக உள்ளது. இதற்கிடையில், மாணவர் நலனைப் பாதுகாக்கப் பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து