முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி 3 நாள் அரசு பயணமாக இன்று இஸ்ரேல் செல்கிறார்

திங்கட்கிழமை, 3 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு பயணமாக இன்று இஸ்ரேல் புறப்பட்டு செல்கிறார். இந்த பயணத்தின்போது இருநாடுகளிடையே கம்ப்யூட்டர் தாக்குதல் தடுப்பு ஒப்பந்தம் ஏற்படலாம் என்று உறுதியாகத்தெரிகிறது.

பாலஸ்தீனம் பிரச்சினையில் அரபு நாடுகளுக்காக இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தாமல் இந்தியா இருந்துவந்தது. பாகிஸ்தானின் போக்கு மாறியதால் இஸ்ரேலுடன் உறவு அவசியமாகிவிட்டது. இதனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலுடன் இந்தியா தூதரக உறவை ஏற்படுத்திக்கொண்டது. அதேசமயத்தில் பாலஸ்தீனம் தனிநாடு என்ற இந்தியாவின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை.
இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தி 25 ஆண்டுகளாகுவதையொட்டி அந்த நாட்டுக்கு பிரதமர் மோடி 3 நாள் அரசு பயணமாக இன்று செல்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு செல்வது இது முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அரபு நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இஸ்ரேல் விளங்குகிறது. இஸ்ரேல் ஒரு சிறு நாடாக இருந்தாலும் தொழில்நுட்பத்தில் உலகத்திலேயே சிறந்த நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்திய ராணுவத்திற்கு லேசர் கருவிகளை இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த லேசர்கள் மூலம் தீவிரவாதிகள் பாறைக்கு மறைவில் ஒளிந்திருந்தாலும் துல்லிதமாக காட்டும்.

விவசாயம், கம்ப்யூட்டர் தாக்குதல் தடுப்பு, சுகாதாரம், ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு ஆகிய துறைகளில் இஸ்ரேல் சிறந்து விளங்குகிறது. இஸ்ரேலில் 3 நாள் பயணத்தை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமன் நீதன்யாகுவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கிடையே கம்ப்யூட்டர் தாக்குதல் தடுப்பு சம்பந்தமான தொழில்நுட்ப ஒப்பந்தம் ஏற்படலாம் என்று தெரிகிறது. இதைத்தவிர விவசாயம், சொட்டு நீர்ப்பாசனம், சுகாதாரம் ஆகிய துறைகளிலும்  ஒத்துழைப்பு அதிகரிக்கலாம். உலகத்திலேயே நீரை குறைந்த அளவு பயன்படுத்தி அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இருநாட்டு பிரதமர்களும் வெளிநாடுகளில் பலமுறை சந்தித்து பேசியுள்ளனர். இரண்டு தலைவர்களும் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர். மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டியிருப்பதாக பெஞ்சமின் தெரிவித்துள்ளார். உலகத்திலேயே முக்கியமான பிரதமர்களில் மோடியும் ஒருவர். பொருளாதாரத்தில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இஸ்ரேலுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ள இந்தியா விரும்புகிறது என்றும் பெஞ்சமின் கூறியுள்ளார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து