பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 'பாதுகாப்பு அதிகாரி' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, 12 லட்சம் அரசு ஊழியர்களுக்கு இனி குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700-ம், அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000-ம் இருக்கும். இந்த ஊதிய உயர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் பணப்பயனுடன் அமுல்படுத்தப்பட்டு வழங்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
‘அலுவலர் குழு’ பரிந்துரைகள்
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய ஊதிய குழு திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் பொழுதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதே போல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும் போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை வழங்கி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக் கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழு தான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது.
புதிய ஊதிய உயர்வு
இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்து, எனது தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லாசியுடன் நடைபெறும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன். இதன்படி, தற்போது உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.77,000 என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு ஊதியம் உயர்வு
மேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான உயர்வை விட அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியை பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
30 சதவிகித ஊதிய உயர்வு
சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின் குறைந்த பட்ச ஊதியம் ரூ.3000 ஆகவும், அதிக பட்ச ஊதியம் ரூ.11,100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 4 குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியம்
இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தஅறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரெண்டு லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்கான ஆணைகளை விரைவில் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைக்கீரை சாம்பார்![]() 2 min 4 sec ago |
முட்டை வறுவல்![]() 3 days 23 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 6 days 19 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-07-02-2023
07 Feb 2023 -
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு மனு தாக்கல்
07 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.
-
குடிமைப்பணி தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயது வரம்பை தளர்த்த நடவடிக்கை எடுங்கள் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
07 Feb 2023சென்னை : கொரோனா பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி ப
-
புதிதாக தேர்வான சப் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்களுக்கு பணி நியமன ஆணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
07 Feb 2023சென்னை : புதிதாக 444 சப் இன்ஸ்பெக்டர்கள் 17 டி.எஸ்.பி.க்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பாலியல் வழக்கில் திருநங்கைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை : திருவனந்தபுரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
07 Feb 2023திருவனந்தபுரம் : முதல்முறையாக பாலியல் வழக்கில் திருநங்கைக்கு 7 ஆண்டு சிறை தண்டனையை விதித்து திருவனந்தபுரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு இன்று வருகை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை
07 Feb 2023புதுடெல்லி : முதல்வர் மு.க.
-
ஈரோட்டில் பணம் பட்டுவாடா:தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.வினர் புகார்
07 Feb 2023சென்னை : ஈரோட்டில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதானி குழும விவகாரத்தில் பார்லி.யில் 4-வது நாளாக எதிர்க்கட்சியினர் அமளி : பிரதமரே வாருங்கள் என கோஷம்
07 Feb 2023புதுடெல்லி : அதானி குழும விவகாரத்தில் பாராளுமன்றத்தில் நேற்று 4-வது நாளாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
-
நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர்: தேவநேய பாவாணர் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
07 Feb 2023சென்னை : “நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர் தேவநேய பாவாணர்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: நிவாரணங்களை வழங்கிய இந்தியாவிற்கு துருக்கி நன்றி
07 Feb 2023அங்காரா : நிலநடுக்கத்தால் கடும் பாதிக்கப்பட்ட இந்தியாவிற்கு துருக்கி நன்றி தெரிவித்துள்ளது.
-
மீட்புப் படை, நிவாரணப் பொருட்களுடன் துருக்கிக்கு மேலும் 2 விமானங்களை அனுப்புகிறது இந்தியா : நிலநடுக்க பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரிப்பு
07 Feb 2023புதுடெல்லி : துருக்கியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
சென்னை ஐகோர்ட்டில் விக்டோரியா கவுரி உள்பட கூடுதல் நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்றனர் : பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
07 Feb 2023சென்னை : சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.சி.திலகவதி ஆகியோரை நிய மித்து ஜனாதிபதி திரெளபதி மு
-
தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். சந்திப்பு குறித்து கு.ப.கிருஷ்ணன் பேட்டி
07 Feb 2023சென்னை : தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த கு.ப கிருஷ்ணன் தெரிவித்தார்.
-
நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
07 Feb 2023சென்னை : நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள் என்று சைபர் கிரைம் கருத்தரங்கில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
-
பார்டர் - காவஸ்கர் கோப்பை தொடர் நாளை தொடக்கம்
07 Feb 2023புதுடெல்லி : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - காவஸ்கர் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்கவுள்ளது.
-
கோவில் யானை குளிப்பதற்கு பிரமாண்ட குளியல் தொட்டி : அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்
07 Feb 2023கோவை : கோவையில் கோவில் யானை குளிப்பதற்காக பிரமாண்ட குளியல் தொட்டியை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது : வரும் 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
07 Feb 2023ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ், அ.தி.மு.க., தேமுதிக, நாம் தமிழர், உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்றுடன்
-
சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதி விக்டோரியா கவுரிக்கு எதிரான மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
07 Feb 2023புதுடெல்லி : விக்டோரியா கெளரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நேற்று பதவியேற்ற நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது எ
-
மின்இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணத்தை பிப்.15-க்கு பிறகு செலுத்த முடியாது
07 Feb 2023சென்னை : மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்காவிட்டால் வரும் 15-ம் தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஏழைகளின் நலனை மையப்படுத்தியே மத்திய அரசின் பட்ஜெட்டுகள் தாக்கல் : பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் பேச்சு
07 Feb 2023புதுடெல்லி : தனது தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஏழைகளின் நலனே மையமாக இருந்தன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை வெல்வது மிகப்பெரியது: ஸ்மித்
07 Feb 2023இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - காவஸ்கர் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்கவுள்ளது.
-
மகளிர் ஐ.பி.எல். தொடர்: இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு
07 Feb 2023மும்பை : ஏலத்தில் பங்கேற்க 1,525 வீராங்கனைகள் பதிவு செய்தநிலையில், இறுதிப்பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
பலி எண்ணிக்கை பன்மடங்கு உயரும் அபாயம் : துருக்கி - சிரியா நாட்டு மக்களை துயரில் ஆழ்த்திய கடும் நிலநடுக்கம்
07 Feb 2023டமஸ்கஸ் : துருக்கி - சிரிய எல்லையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 5,000 -ஐ கடந்துள்ளது.
-
120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
07 Feb 2023சென்னை : 120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்தை துவக்கிய அ.தி.மு.க. வேட்பாளர் : வரலாறு படைப்போம் என கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
07 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வரலாறு படைக்கும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.