முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கம் -அசாம் இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 17 ஜனவரி 2026      இந்தியா
PM-Modi-1-2026-01-17

கொல்கத்தா, மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரயில் நிலையம் வரை இயங்கும் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். 

மேற்கு வங்கத்தின் மால்டா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரயில் நிலையம் வரை இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 958 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த ரயில் சேவை வழங்கப்படுகிறது. 

அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 958 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி நேரத்தில் கடக்கிறது.

நாட்டின் வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் ரயிலாக இது பார்க்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய 3-டைர் ஏசி பெட்டிக்கு ரூ.2,299, 2-டைர் ஏசி பெட்டிக்கு ரூ.2,970 மற்றும் முதல் ஏசி பெட்டிக்கு ரூ.3,640 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

இதில் ஜி.எஸ்.டி. சேர்க்கப்படவில்லை. பயணிகள் டிக்கெட் எடுக்கும் போது ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். இந்த ரயிலில் 3-டைர் ஏசி பெட்டிகள் 11, 2-டைர் ஏசி பெட்டிகள் 4, முதல் ஏசி பெட்டி ஒன்று என மொத்தம் 16 நவீன பெட்டிகள் இடம்பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து