முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு 6,453.54 கோடி ரூபாய் பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்

சனிக்கிழமை, 17 ஜனவரி 2026      தமிழகம்
Periyakaruppan 2023 07 31

சென்னை, தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு ரூ.6,453.54 கோடி பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், மொத்த கூட்டுறவு துறையின் அர்ப்பணிப்பு, இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாத வரலாற்றுச் சாதனை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீர்மிகு திட்டங்கள் மக்களை சென்றடையவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், பேணிக்காத்திடவும், அயராது சிந்தித்தும் செயல்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைகளை அறிந்தும், உணர்ந்தும் துறைகள் தோறும் பல திட்டங்கள் அளித்து, அதில் சாதனைகளையும் புரிந்து வருகிறார்.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000/- வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 04.01.2026 முதல் 07.01.2026 வரை தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் வழங்கப்பட்டது.

இந்த தைத்திருநாளை ஒரு திருநாளாக மட்டுமல்ல, ஒரு திருப்புமுனையாக மாற்றியிருக்கிறது தமிழக அரசு

ஜனவரி 4 - முதல்-அமைச்சரின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு. அதன் தொடர்ச்சியாக, ஜனவரி 5 – அரசாணை; வார்த்தை அல்ல செயல் அதுவே வாழ்வில் வந்த நம்பிக்கையாக செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கு கைகளில் பரிசாக ரொக்கமாக ரூ.3,000 வீதம் ரொக்கம் ரூ.6687.51 கோடி, ஒரு கிலோ அரிசியாக ஒரு கிலோ சர்க்கரையாக ஒரு முழு நீளக் கரும்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.248.66 கோடி மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.668.12 கோடி செலவில் வேட்டி சேலை மொத்தம் ரூ.7604.29 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு. எண்கள் பெரிது ஆனால் மக்கள் மகிழ்ச்சி அதைவிட பெரிது.

இந்த டிஜிட்டல் மயமான காலகட்டத்தில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை ரொக்கமாக வழங்கிட கூட்டுறவுத் துறையின் சிறப்பான திட்டமிடல் மற்றும் தொய்வில்லாமலும், விரைவாக குறைந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாத வரலாற்றுச் சாதனை. மேலும், இந்தியாவிலேயே 2.15 கோடி பயனாளர்களுக்கு ரூ.6453.54 ரொக்கமாக குறுகிய நாட்களுக்குள் பொங்கல் தொகுப்பினை 97% வழங்கியது தமிழ்நாடு முதல்வரின் அரசு தான்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து