முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனிக்கிழமை, 17 ஜனவரி 2026      தமிழகம்
CM-2-2026-01-17

அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடைப் பராமரிப்புத்துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அலங்காநல்லூரில் காளைகளுக்கு ரூ.2 கோடியில் சிறந்த உயர்தர சிகிச்சை, பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

பொங்கல் பண்டிகையொட்டி, ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 3 நாட்களுக்கு முன் அவனியாபுரத்திலும், நேற்று முன்தினம் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இந்த நிலையில் நேற்று (ஜன.17) உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாய் துவங்கியது. இந்தப் போட்டியை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.

அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து அலங்காநல்லூர் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண காலை 11.10 மணியளவில் விழா மேடை திடலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் பி. மூர்த்தி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே.என். நேரு, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் 2 முக்கிய அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், மாடுபிடி வீரர்களின் நீண்டநாள்களாக சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து வந்தனர்.  இந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக முதல்வர் ஸ்டாலின், “ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளைப் அடக்கும் சிறந்த வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடைப் பராமரிப்புத்துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என்றும், அலங்காநல்லூரில் காளைகளுக்கு ரூ.2 கோடியில் சிறந்த உயர்தர சிகிச்சை, பயிற்சி மையம் அமைக்கப்படும்” என்றும் அறிவித்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்தக் கோரிக்கை மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சி, உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து