முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூடி’ஸ் தரமதிப்பீட்டு உயர்த்தலினால் நாம் கடினங்களை கடந்து விட்டோம் என்று அர்த்தமல்ல: மன்மோகன் சிங்

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: சர்வதேச தரச்சான்று நிறுவனமான மூடி’ஸ் நிறுவனம் இந்தியா மீதான மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளால் மதிப்பீடு பிஏஏ2-வுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் இதனால் நாடு பொருளாதார கடினப்பாடுகளை கடந்து விட்டது என்று பொருளல்ல என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் நவ.18-ம் தேதி கல்லூரி கருத்தரங்கைத் தொடங்கி வைத்து மன்மோகன் சிங், பொருளாதாரம் முன்னோக்கிச் செல்ல வலுவான, சக்திவாய்ந்த வழிகாட்டுதல் தேவை.

நாடு பொருளாதார கடினகாலத்தைக் கடந்து விட்டது என்ற தவறான நம்பிக்கைக்குள் கவரப்படுதல் கூடாது, என்றார். முன்னதாக, மன்மோகன் சிங், ‘பணமதிப்பு நீக்கம் வரலாற்றுத் தவறு’ என்றார். கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா நடத்திய ‘படையொருக்கம்’ பேரணியில் மன்மோகன் சிங் கூறியபோது, பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி.யின் அவசரகோல அமலாக்கமும் நாட்டி பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கியுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து