தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      வர்த்தகம்
gold 2019 01 30

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ஒரு சவரன் ரூ.28,888-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த 4-ம் தேதி வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ. 30 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு படிப்படியாக விலை குறைந்து 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,500 வரை குறைந்த நிலையில் விலை மீண்டும் உயர்ந்தது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3, 625-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3,611 க்கு விற்பனையானது. இதனால் ஒரு பவுன் ரூ.112 சரிந்து ரூ.28,888 க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.50.50 க்கும், ஒரு கிலோ ரூ.50 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து