ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி 2-வது வெற்றி

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      விளையாட்டு
Guwahati win 2019 11 07

ஐதராபாத் : 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் ஐதராபாத்தில் நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் 86-வது நிமிடத்தில் கவுகாத்தி அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

ஐதராபாத் வீரர் ஷங்கர் பந்தை கையால் கையாண்டதால் கவுகாத்தி அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை அந்த அணியின் மேக்சி பாரீரோ கோலாக்கினார். முடிவில் கவுகாத்தி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை தோற்கடித்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய கவுகாத்தி அணி 2 வெற்றி, 2 டிரா என்று 8 புள்ளியுடன் முதலிடம் வகிக்கிறது. ஐதராபாத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து