முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13- வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலக கோப்பை வெல்வதே எங்கள் இலக்கு: சினே ரானா

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2025      விளையாட்டு
Woman 2023-12-16

Source: provided

மும்பை : இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று இந்திய வீராங்கனை சினே ரானா தெரிவித்து உள்ளார்.

வரும் 30-ம் தேதி....

13- வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் போட்டிகள் நடக்கிறது. கவுகாத்தியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா -இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் உலக கோப்பை போட்டி சவால் கள் நிறைந்து இருக்கும் என்றும், கோப்பையை வென்று கொடுப்பது மட்டுமே எங்களது இலக்கு என்றும், இந்திய வீராங்கனை சினே ரானா தெரிவித்து உள்ளார்.

சிறப்பான உணர்வு...

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- சொந்த மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவது சுவாரசியமானதாகவும், சவாலானதாகவும் இருக்கும். சொந்த மண்ணில் ஆடுவது சிறப்பான உணர்வை அளிக்கிறது. நீண்ட ஆண்டுகளாக ஆடி வரும் ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான அணியில் விளையாட உள்ளது மேலும் சிறப்பான விஷயம். இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

பிரீமியர் லீக்கால்... 

மகளிர் பிரீமியர் லீக் வீராங்கனைகளுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது. உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுடன் இணைந்து மற்றும் அவர்களுக்கு எதிராக ஆடும் வாய்ப்பினை பிரீமியர் லீக் ஏற்படுத்திக் கொடுத்தது. வெளிநாட்டு வீராங்கனைகள் எவ்வாறு விளையாடுகிறார்கள் எவ்வாறு திட்டம் வகுக்கிறார்கள், முக்கியமான தருணங்களில் எவ்வாறு செயல்படுகிறார்கள் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுக்கொள்ள உதவியது. இவ்வாறு சினே ரானா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து