முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2025      விளையாட்டு
shreyas

Source: provided

லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.

2-வது போட்டி...

இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. முதல் போட்டி டிரா ஆன நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி நேற்று (செப். 23) லக்னோவில் தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, இந்தியா ஏ அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், தனது பொறுப்பிலிருந்து விலகினார். இதனால், இந்தியா ஏ அணியின் துணை கேப்டன் துருவ் ஜூரேல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

காரணம் தெரியவில்லை...

ஷ்ரேயாஸ் ஐயர் விலகியதற்கான அதிகாரபூர்வ மற்றும் உறுதியான காரணங்கள் வெளியாகவில்லை என்றாலும், தனிபட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளதாக இந்திய அணித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அணியில் கே.எல். ராகுல், முகமது சிராஜ், நிதீஷ்குமார் ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி விவரம்: 

துருவ் ஜூரேல் (கேப்டன்), ஜெகதீஷன், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், படிக்கல், நிதீஷ்குமார் ரெட்டி, பலோனி, பிரசாத், முகமது சிராஜ், குர்னூர், மானவ் சுதர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து