அரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019      அரசியல்
Nitin Gadkari 2019 03 28

அரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் வணிக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதின் கட்காரி, அரசியலிலும், கிரிக்கெட்டிலும் எந்த நிமிடத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம், சில சமயங்களில் நீங்கள் தோற்பது போல் இருந்தாலும், அதன் முடிவுகள் அதற்கு நேர் மாறாக அமையவும் வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார். மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைப்பதை மனதில் வைத்தே கட்கரி இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே செய்தியாளர் சந்திப்பின் போது மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து கேட்டபோது, தான் டெல்லியில் இருந்து தற்போது தான் வந்ததாக கட்காரி பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து