முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி வருகை எதிரொலி: செங்கல்பட்டில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      தமிழகம்
Drone 2023 06 12

செங்கல்பட்டு, பிரதமர் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் செங்கல்பட்டில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23 -ம் தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டில் நேற்று முதல் 23-ம் தேதி வரை, 3 நாட்கள் டிரோன்கள் பறக்க வரை தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, பிரதமர் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், ஹீலியம் பலூன்கள் உள்ளிட்டவை பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து