முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை மாநில காவல்துறையும் விசாரிக்கலாம்:

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      இந்தியா
Supreme-Court 2023-04-06

மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை இனி மாநில காவல்துறையும் விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர் மீது மாநிலக் காவல்துறை வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக, சிபிஐ-இடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், மாநில புலனாய்வு அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, சிபிஐ-யின் அனுமதி இல்லை என்ற காரணத்திற்காகச் செல்லாது என்று அறிவிக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. 

இது தொடர்பாக நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவின்படி, அந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை ஒரு மாநில ஏஜென்சி, மத்திய ஏஜென்சி அல்லது எந்தவொரு காவல்துறை ஏஜென்சியும் விசாரிக்க முடியும்; ஆனால், விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ஒரு குறிப்பிட்ட தரவரிசையில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான லஞ்சம், ஊழல் மற்றும் தவறான நடத்தை தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்வதற்கோ அல்லது விசாரிப்பதற்கோ மாநிலக் காவல்துறைக்கோ அல்லது மாநிலத்தின் சிறப்பு ஏஜென்சிக்கோ ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை அல்லது அவர்களை விலக்கி வைக்கவில்லை" என்று தெரிவித்தனர். 

நிர்வாக வசதிக்காகவும் மற்றும் ஒரே வேலையை இரண்டு அமைப்புகள் செய்வதைத் தவிர்க்கவுமே, மத்திய அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ.-இடமும், மாநில அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு மாநில ஊழல் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர். 

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பிடியாணையில்லா குற்றங்கள் என்பதால், மாநில காவல்துறையும் அவற்றை விசாரிக்க முடியும் என்று நீதிமன்றம் மேலும் கூறியது. மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்ய மறுத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தபோது சுப்ரீம் கோர்ட் இந்தத் தீர்ப்பை வழங்கியது. 

குற்றம் சாட்டப்பட்டவர் மத்திய அரசு ஊழியராக இருந்தபோதிலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 'சி.பி.ஐ. மட்டுமே இந்த வழக்கை அல்லது விசாரணையைத் தொடங்கியிருக்க முடியும் என்று கூறுவது தவறானது' என உயர் நீதிமன்றம் எடுத்த நிலைப்பாடு சரியானது என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து