முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரன்: மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய இ.பி.எஸ்.

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      தமிழகம்
EPS 2020 11-16

சென்னை, தே.ஜ.கூட்டணியில் மீண்டும் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ள நிலைியல் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. இந்த சூழலில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று அறிவித்திருந்தார்.  அ.தி.மு.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளநிலையில், மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து