முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு-செல்போன், இணையதள சேவை துண்டிப்பு

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      இந்தியா
Suicide 2023 04 29

கவுகாத்தி, அமாமில் மீண்டும் வன்முறை சம்பவம் நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு செல்போன், இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.

அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் போடோ சமூகத்தை சேர்ந்த 3 பேர் ஒரு வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் ஆதிவாசி ஒருவர் மீது மோதியதால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வாகனத்தில் வந்தவர்களை ஆதிவாசிகள் தாக்கினர். மேலும், அவர்களது வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. சில வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 

ஒரு கும்பல் தேசிய நெடுஞ்சாலைகளில் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தினர். அரசு அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். இணையதளம் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் கோக்ரஜார் மாவட்டத்தில் இணையதளம் மற்றும் செல்போன் சேவை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து