முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தியில் இருந்து இன்று ஜனக்பூருக்கு ராமர் ஊர்வலம் - பிரதமர் மோடி, யோகி ஆகியோருக்கு வி.எச்.பி அழைப்பு

புதன்கிழமை, 20 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

அயோத்தி : அயோத்தியில் இருந்து நேபாலின் ஜனக்பூருக்கான ராமர் ஊர்வலம் இந்தமுறை விமரிசையாக நடத்த விஷ்வ இந்து பரிஷத்(விஎச்பி) திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ஊர்வலம் இன்று அயோத்தியில் இருந்து தொடங்குகிறது. இதில் முதன் முறையாக கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு வி.எச்.பி. அழைப்பு விடுத்துள்ளது.

அயோத்தியை சேர்ந்த ராமர் அருகிலுள்ள நேபாலின் ஜனக்பூரில் நடைபெற்ற சுயம்வரத்தில் கலந்து கொண்டு சீதையை மணமுடித்தார் என ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜனக்பூரில் சீதை பிறந்த இடமாகக் கருதி அங்கு பெரிய அளவில் ராம் - ஜானகி கோயில் அமைந்துள்ளது. இங்கு ராம் - சீதா திருமணம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, அயோத்தியில் இருந்து ராமர் ஊர்வலம் கிளம்பி ஜனக்பூரை அடைகிறது. வி.எச்.பி. சார்பில் இந்த ஊரவலத்தை 2002 -ம் ஆண்டு முதல் அயோத்தியின் தர்மயாத்ரா மகாசங்கம் நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 9 -ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. இதனால், அயோத்தியின் சாதுக்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். எனவே, இந்தமுறைக்கான ராமர் ஊர்வலம் இன்று (நவம்பர் 21 -ல்) அயோத்தியில் இருந்து தொடங்குகிறது. இது, நவம்பர் 28 - ம் தேதி ஜனக்பூர் சேர்ந்த பின் விழாக்கள் துவங்குகின்றன.இதில், அயோத்தியின் முக்கிய சாதுக்களும், ராம்பக்தர்களும் என சுமார் 200 பேர் கலந்து கொள்கின்றனர். ஜனக்பூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள வி.எச்.பி சார்பில் பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராமர் ஊவலத்தில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய சாதுக்கள் அயோத்தி அடைந்துள்ளனர். இவர்களது ஊர்வலம் ஜனக்பூர் அடைந்த பின் 29 -ம் தேதி அங்குள்ள தசரதர் கோயிலில் திலக உற்சவம் நடைபெறும். இதை தொடர்ந்து அங்குள்ள ராம் - ஜானகி கோயிலில் கன்னி பூசை, தனுஷ் யாகம், ராம் லீலா ஆகியவை டிசம்பர் 2 வரை நடைபெறுகிறது. இதன் பிறகு டிசம்பர் 3-ல் தர்ம யாத்திரை அயோத்தி திரும்ப உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து