முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்ச் 1 முதல் 20 வரை ஹெச்.1-பி விசா விண்ணப்பங்கள் பெறப்படும்: அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஹெச்.1-பி விசா முதற்கட்ட விண்ணப்பங்கள் மார்ச் 1 முதல் 20-ம் தேதி வரையில் பெறப்படும் என்று அமெரிக்க அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

ஹெச்.1-பி விசா விண்ணப்பங்களை வரவேற்க அமெரிக்கா தயாராகி வருகிறது. ஹெச்.1-பி விசா என்பது அமெரிக்கா அல்லாதோருக்கான பணியிட குடியுரிமை அனுமதி விசா ஆகும். வெளிநாட்டைச் சேர்ந்தோர் அமெரிக்காவில்  பணி செய்ய இது மிகவும் முக்கியமான விசா ஆகும். பெரும்பாலான இந்திய ஐ.டி. ஊழியர்கள் ஹெச்.1-பி விசா மூலமாகவே அமெரிக்காவில் பணி செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

அதிக திறமை கொண்ட, உயர்ந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு மட்டுமே ஹெச்.1-பி விசா வழங்கும் வகையில், பல்வேறு மாற்றங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. இந்த மாற்றங்கள் அமலுக்கு  வந்தால் முதுநிலை அல்லது அதற்கும் மேலான கல்வி பயின்ற வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் அதிக அளவில் ஹெச்.1-பி விசா பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த அளவு தற்போது உள்ளதைவிட சுமார் 16 சதவீதம் வரை அதிகரிக்கும் என  அமெரிக்க அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. மேலும் ஹெச்.1-பி விசா அடிப்படையில் பணியமர்த்தும் நிறுவனங்கள் அமெரிக்க குடிபெயர்வு சேவைத்துறையிடம் மின்னணு முறையில் பதிவு செய்து கொள்ளலாம். ஹெச்.1-பி விசா விண்ணப்பங்கள் எலெக்ட்ரானிக் முறையிலேயே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்காக ஹெச்.1-பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் 2021-ம் நிதியாண்டுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன்  மூலம் பதிவு செய்து 10 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனால் விண்ணப்பிப்பவர்களுக்கு செலவு குறைவதுடன், நிர்வாக வேலையை எளிமைப்படுத்தும் வகையிலும் அமையும் என அமெரிக்க குடிபெயர்வு  சேவைத்துறை கூறியுள்ளது. புதிய விதிகள் குறித்து கடந்த 3-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கூறியிருந்தது. இந்நிலையில், ஹெச்.1-பி விசா முதற்கட்ட விண்ணப்பங்கள் மார்ச் 1 முதல் 20-ம் தேதி வரையில் பெறப்படும் என்று அமெரிக்க அரசின் உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து