முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபா டெல் ரே கால்பந்து தொடர்: காலிறுதியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் தோல்வி

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

ஸ்பெயின் : ஸ்பெயினில் நடைபெற்று வரும் கோபா டெல் ரே கால்பந்து தொடரின் காலிறுதியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வியடைந்தன.

ஸ்பெயின் நாட்டில் முன்னணி கால்பந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் கால்பந்து லீக் லா லிகா. இதில் விளையாடும் முன்னணி அணிகளும், அதே போல் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை லீக்கில் சிறப்பாக விளையாடும் அணிகளையும் சேர்த்து ஆண்டுதோறும் கோபா டெல் ரே என்ற நாக்-அவுட் முறையிலான கோபா டெல் ரே தொடர் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - அத்லெடிக் பில்போ அணிகள் மோதின. 90-வது நிமிடம் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இந்நிலையில் இன்ஜூரிக்கான நேரத்தில் (93-வது நிமிடம்) அத்லெடிக் பில்போ அணிக்கு ஓன் கோல் மூலம் கோல் கிடைத்தது. இதனால் 1-0 என பார்சிலோனாவை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - ரிய் சோசிடாட் அணிகள் மோதின. ரியல் மாட்ரிட் அணிக்கு அச்சுறுத்தும் வகையில் விளையாடிய ரியல் சோசிடாட் அணி 22, 54 மற்றும் 56-வது நிமிடங்களில் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது. இதனால் 3-0 என முன்னிலை பெற்றிருந்தது. அதன்பின் ரியல் மாட்ரிட் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 59-வது நிமிடத்தில் மார்சிலோ ஒரு கோல் அடித்தார். இருந்தாலும் 69-வது நிமிடத்தில் ரியல் சோசிடாட் 69-வது கோல் அடித்து 4-1 என முன்னிலைப் பெற்றது. 81-வது நிமிடத்தில் ரோட்ரிகோ ஒரு கோலும், 93-வது நிமிடத்தில் நசோ ஒரு கோலும் அடித்தனர். என்றாலும் ரியல் மாட்ரிட் அணி 3-4 எனத் தோல்வியை சந்தித்தது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி இரண்டு அணிகள் காலிறுதியோடு வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து