முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை : மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் நேற்று பக்தர்கள் சென்று சிவபெருமானை தரிசனம் செய்தனர். நேற்று இரவு சிறப்பு வழிபாடுகளும் நடந்தன.

நாடு முழுவதும் நேற்று மகா சிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து சிவாலயங்களும் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. ஆலயங்களில் இன்று காலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மகா சிவராத்திரி விழாவை மிகவும் உற்சாகமாக கொண்டு செல்லும் வகையில், பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. சிவராத்திரி தினமான நேற்று சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவில்களுக்கு சென்ற வண்ணம் இருந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீ மகா காளேஸ்வரர் ஆலயம், அமிர்தசரசில் உள்ள ஷிவாலா பாக் பையான் கோவில், டெல்லி சாந்தினி சவுக்கில் உள்ள ஸ்ரீ கவுரி சங்கர் ஆலயம், மும்பையில் உள்ள பபுல்நாத் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வழக்கத்தை விட நேற்று ஏராளமான பக்தர்கள் திரண்டு வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து சிவபெருமானை தரிசனம் செய்தனர். 

மகா சிவராத்திரியை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் கலபுரகியில் பிரம்மகுமாரிகள் இயக்கத்தில் உள்ள 25 அடி உயர சிவலிங்கம், சுமார் 300 கிலோ பட்டாணியால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுகிறது. ஆதியோகி முன்பு நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு அனைத்து சிவாலயங்கள் உள்ள பகுதிகளிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து