சூதாட்டம் நடத்தியதாக நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 14 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020      சினிமா
Shyam 2020 07 28

Source: provided

சென்னை : அடுக்குமாடிக் குடியிருப்பில் சூதாட்ட விடுதி நடத்தியதாக நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 14 பேரை போலீஸார் கைது செய்தனர். பிறகு, ஸ்டேஷனில் எழுதி வாங்கி வழக்கு எதுவும் போடாமல் ஜாமீனில் விடுவித்தனர். 

நுங்கம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட லயோலா கல்லூரி எதிரே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் தளத்தில் நடிகர் ஷ்யாம் POKER CLUB எனும் சூதாட்ட விடுதியை சட்டவிரோதமாக நடத்தி வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முத்து வேல்பாண்டி தலைமையில் நுங்கம்பாக்கம் போலீஸார் நடிகர் ஷ்யாமின் சூதாட்ட விடுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். 

அப்போது அங்கு சூதாடி கொண்டிருந்த நடிகர் ஷ்யாம் உட்பட 14 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்கள் மீது சூதாட்ட வழக்கு 45, 46 கிரைம் நம்பர் பதிவு செய்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், எழுதி வாங்கிக் கொண்டு நிலைய ஜாமீனில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து