தங்கம் விலை தொடர்ந்து 10-வது நாட்களாக அதிகரித்து சவரன் 41 ஆயிரத்தை நெருங்கியது.
தங்கம் விலை கடந்த 20-ம் தேதி முதல் தொடர்ச்சியாக உயர்ந்து புதிய சாதனை படைத்து வருகிறது. 9-வது நாளாக நேற்று முன்தினம் கிராம் ரூ. 5,075-க்கும்,சவரன் ரூ. 40,600-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று காலை தொடர்ந்து 10-வது நாட்களாக தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ. 28 அதிகரித்து கிராம் ரூ.5,103-க்கும், சவரனுக்கு ரூ. 224 உயர்ந்து சவரன் ரூ. 40,824-க்கும் விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். கடந்த 10 நாட்களில் மட்டும் தொடர்ச்சியாக தங்கம் விலை ரூ. 3,208 அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை உயரும் என்று கூறப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 60 காசு குறைந்து ரூ.71.20-க்கு விற்பனையானது.