இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      விளையாட்டு
England-Pakistan 2020 08 02

Source: provided

இங்கிலாந்து அணி கடந்த 10 தொடர்களில் 8-ல் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் தொடரில் இதை மாற்ற விரும்புகிறது. 

இங்கிலாந்து பாகிஸ்தான் இடையிலான முதல்டெஸ்ட் இன்று தொடக்கம் இங்கிலாந்து பாகிஸ்தான் இடையிலான முதல்டெஸ்ட் இன்று தொடக்கம் 

பயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள் 

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு கடந்த மாதம் 8-ந்தேதி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் தொடர் தொடங்கின. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது. 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்து சுமார் ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. 

இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் வலுவானது. அங்குள்ள சீதோஷ்ணநிலை பந்து ஸ்விங் ஆக சாதகமாக இருக்கும் என்பதால் அந்த அணியை எதிர்த்து விளையாடுவது எளிதான காரியம் அல்ல. இங்கிலாந்து மண்ணில் வெளிநாட்டு அணி தொடரை வென்றால் மிகச்சிறப்பானதாக பார்க்கப்படும். 

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டை இழந்ததாலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது. 

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் வலுவாக உள்ளனர். ரோரி பேர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜோ டென்லி ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தால் அந்த அணியால் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடியும். 

பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் உள்ளனர். இதனால் பந்து வீச்சு குறித்து அந்த அணி கவலைப்படாது. 

ஆனால் கடந்த 10 தொடர்களில் 8-ல் முதல் போட்டியை இங்கிலாந்து தோற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகவும் இது நிகழ்ந்தது. இதனால் தொடரை வெற்றியோடு ஆரம்பிக்க இங்கிலாந்து முயற்சி செய்யும். 

பாகிஸ்தான் அணி கடந்த இரண்டு முறை இங்கிலாந்து சென்றிருந்தபோது தொடரை டிரா செய்துள்ளது. அந்த நம்பிக்கையில் களம் இறங்கும். பந்து வீச்சில் முகமது அப்பாஸ், ஷாஹீன் ஷா மற்றும் நசீம் ஆகியோர் முதுகெலும்பாக உள்ளனர். 

பேட்டிங்கில் கேப்டன் அசார் அலி, இளம் வீரர் பாபர் அசாம் உள்ளனர். 350 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு கடும் சவாலாக விளங்கும்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து