முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளா நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பினராய்

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020      இந்தியா

திருவனந்தபுரம் : கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கடந்த 7-ம் தேதியன்று ஏற்பட்ட நிலச்சரிவில், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து சேதமடைந்தன.

இந்த விபத்தில் சுமார் 80 பேர் மண்ணுக்குள் சிக்கினர். தற்போது வரை அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் சம்பவ இடத்தை கேரள முதல்வர் பினராய் விஜயன், கவர்னர் ஆரிப் அகமது மற்றும் உயரதிகாரிகள் உடன் சென்று நேரில் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து வெளியிட்ட பினராய் விஜயன் வெளியிட்ட அறிவிப்பில், மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவில் இறந்த, உயிரோடு மீட்கப்பட்டோரின் குழந்தைகளது கல்விச் செலை அரசே ஏற்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து