நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் மேலும் 2 நடிகைகளுக்கு சம்மன்

செவ்வாய்க்கிழமை, 22 செப்டம்பர் 2020      சினிமா
Sushant-Singh 2020 09 22

Source: provided

மும்பை : நடிகர் சுஷாந்த் சிங்  வழக்கில் மேலும் 2 பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன் அனுப்ப மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். 

கன்னட திரைத்துறையிலும், பாலிவுட்டிலும் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகை ரியா சக்கரவர்த்தி மீது சுஷாந்தின் தந்தை ராஜ்புட் சிங் புகார் தெரிவித்த நிலையில், ரியாவின் வாட்ஸ் ஆப் உரையாடல்கள் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதை அம்பலப்படுத்தியது. இதையடுத்து ரியாவை கைது செய்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நடிகை ரியா அளித்த தகவலின் அடிப்படையில், மேலும் சில பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் மகள் சாரா அலிகானிடமும், ஷர்த்தா கபூர் ஆகியோரிடமும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் பாலிவுட் நடிகைகள் அட்ரங்கி ரே,  ரகுல் ப்ரீத் சிங், பேஷன் டிசைனர் சைமன் கம்பட்டா ஆகியோரிடமும் அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால், பாலிவுட் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து