முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணப்பா திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      சினிமா
Kannappa-Review 2025-06-30

Source: provided

கடவுள் இல்லை. கடவுள் என்பதே இல்லை, சிலைகள் அனைத்தும் வெறும் கற்கள் தான் என்ற மனநிலையில் இருந்த இளைஞன் ஒருவன் எப்படி சிவனின் பக்தராக உருவெடுக்கிறார் என்பதே கண்ணப்பா படத்தின் ஒரு வரிக்கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு, கடவுள் மறுப்பாளராக புரட்சிகரமான வசனங்கள் பேசுவது, போர் வீரனாக அம்பு எய்வது, காதல் வயப்பட்டு மயங்குவது, சிவபக்தராக மாறி பக்தி பரவசத்தில் உருகுவது என தனது அபார நடிப்பைக் கொடுத்துள்ளார். நாயகி ப்ரீத்தி கவர்ந்திழுக்கும் அழகில் அசத்துகிறார். மோகன் பாபு,  மோகன்லால்,  பிரபாஸ், அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், சரத்குமார், மதுபாலா, ஐஸ்வர்யா என அனைவரும் அருமையான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.  ஷெல்டன் சாவின் ஒளிப்பதிவு அருமை. ஸ்டீபன் தேவஸீ இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே ரகம். படத்தொகுப்பாளர் ஆண்டனியின் உழைப்பு கதை நகர்த்தலில் தெரிகிறது. இயக்குநர் முகேஷ் குமார் சிங் கண்ணப்பர் என்ற சிவபக்தரின் பக்தியின் ஆழத்தை வெளிக்காட்டும் ஒரு படமாக இருந்தாலும், பக்தி என்ற பெயரில் மூடப்பழக்கங்களில் மூழ்கி இருப்பவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் காட்சிகளை வைத்திருப்பது பாராட்டக்குரியது. மொத்தத்தில், ‘கண்ணப்பா’ பக்தி படம் மட்டும் அல்ல. இது ஒரு நாத்திகத்தை பிரதிபலிக்கும் பிரமாண்ட படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து