எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் கல்லூரிகளில் வகுப்புகள் செயல்படும் தேதிகளையும் அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
கட்டுப்பாட்டுக்குள் நோய் பரவல்:
அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் 6.55 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,600 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000ல் இருந்து தற்போது 11,000 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.
டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு:-
தமிழ்நாட்டில் 30.11.2020 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 28.11.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30.11.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
புதிய தளர்வுகள்
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது :
1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
2) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை , முதுநிலை வகுப்புகள்) 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
புதிய மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வகுப்புகள்:
எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
3) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மெரினா திறப்பு
4) வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.
5) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.
6) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
7) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும்.
8) வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-
மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.
எனவே பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் : மதுரையில் மாநாடு குறித்து ஆலோசனை
18 Jul 2025சென்னை : சென்னையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
18 Jul 2025ஓசூர், ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன்பு நேரில் ஆஜராகி விளக்கம்
18 Jul 2025சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில்
-
எதிரிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம் : தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் பதிவு
18 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, மு.க.ஸ்டாலின் முறியடித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்;
-
5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இன்டெல் திடீர் முடிவு
18 Jul 2025நியூயார்க், அமெரிக்காவின் ஒரேகான் அலுவலகத்தில் மட்டும் 2,392 பேர் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
-
த.வெ.க.வுடன் கூட்டணியா..? தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது - இ.பி.எஸ்.
18 Jul 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
-
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
வரும் பார்லி. கூட்டத்தொடரில் கல்வி - நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க குரல் கொடுப்போம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
18 Jul 2025சென்னை : வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க.
-
திருவண்ணாமலை கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Jul 2025சென்னை, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயார
-
வங்கக்கடலில் வரும் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது
18 Jul 2025சென்னை : வங்கக்கடலில் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
18 Jul 2025சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற
-
புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: புதுச்சேரி முதல்வர் நேரில் வாழ்த்து
18 Jul 2025புதுச்சேரி : புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
18 Jul 2025சென்னை : தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பெருந்தலைவர் காமராஜர் விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு
18 Jul 2025சென்னை : காமராஜர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
-
அகமதாபாத் விமான விபத்து விவகாரம்: அமெரிக்க இதழின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த விசாரணைக்குழு
18 Jul 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று அமெரிக்க இதழில் அறிக்கையை வெளியிட்டது. அதனை மறுத்துள்ளது விசாரணை குழுவினர்.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு வள்ளி குகையில் வழிபாடுக்கு பக்தர்களுக்கு அனுமதி
18 Jul 2025திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வள்ளி குகையில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
-
மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
18 Jul 2025சென்னை : மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
18 Jul 2025ராய்பூர் : மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை நேற்று கைத
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
கூட்ட நெரிசல்: தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: முதல்வர் சித்தராமையா தகவல்
18 Jul 2025பெங்களூரு, ஆர்.சி.பி.
-
பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி
18 Jul 2025பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.