ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது வங்காளதேசம்

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      விளையாட்டு
Bangladesh-Cricket 2021 01

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி டாக்காவில் நடந்தது. கொரோனா அச்சத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னணி வீரர்கள் விலகியதால் இந்த ஆட்டத்தில் 6 புதுமுக வீரர்கள் இறக்கப்பட்டனர். முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 32.2 ஓவர்களில் 122 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அறிமுக வீரர் கைல் மேயர்ஸ் 40 ரன் எடுத்தார். வங்காளதேசத்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் 2-வது குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும். 

ஓராண்டு தடை முடிந்து அணிக்கு திரும்பிய சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல்-ஹசன் 4 விக்கெட்டுகளும், ஹசன் மமுத் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 33.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து