முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவின் கலை பல்கலைக்கழகம் சார்பி்ல் தயாரிக்கப்பட்ட நூல்: முதல்வர் எடப்பாடி வெளியிட்டார்

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில்,  தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒருங்கே தயாரிக்கப்பட்ட, இசை மற்றும் கவின் கலைகளின் வளர்ச்சி - ஒரு வரலாற்றுப் பார்வை  (Nurturing Music and Fine Arts – A Historical Perspective) என்ற நூலினை வெளியிட்டார்.

இந்நூல், தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்த நம் பண்டைய கலைகளான  இசை, ஆடல், ஓவியம் மற்றும் சிற்பம் ஆகியவை குருகுலங்களில் போதிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் கற்பிக்கப்பட்டு, தற்போது ஒரு பல்கலைக் கழகமாக உயர்ந்து நிற்கும் வரலாற்றினையும், சாதனைகளையும் விளக்குகிறது.

மேலும், இந்நூலில் வரலாற்று சிறப்பு வாய்ந்த எழும்பூர் அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை மற்றும் திருவையாறு அரசு இசைக் கல்லூரிகள், மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் அரசு  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மற்றும் இப்பல்கலைக் கழகத்துடன் இணைந்துள்ள பிற கல்லூரிகள் / கலை நிறுவனங்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 

இந்நூலை தென்னிந்திய இசை தொடர்பான  நூல்களை  எழுதிய திரு.வே. ஸ்ரீராம் அவர்கள் ஆங்கிலத்திலும்,  அதன் தமிழாக்கத்தினை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பிரமீளா குருமூர்த்தியும் எழுதியுள்ளனர்.  

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச் செயலாளர்  சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை  கூடுதல் தலைமைச்  செயலாளர் விக்ரம் கபூர், கலை பண்பாட்டுத் துறை ஆணையர் கலையரசி, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பிரமீளா குருமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து