2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில்

சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021      விளையாட்டு
Chris-Gayle 2021 02 27

Source: provided

லண்டன் : கடந்த இரு வருடங்களுக்கு பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளார் பிரபல வீரர் கிறிஸ் கெயில் இடம்பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாட அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணி  மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணியில் பிரபல வீரர் கிறிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த இரு வருடங்களில் முதல்முறையாக மே.இ. தீவுகள் அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அதேபோல 9 வருடங்களுக்குப் பிறகு ஃபிடல் எட்வர்ட்ஸும் அணியில் இணைந்துள்ளார்.

டி-20 அணி

பொலார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரண் (துணை கேப்டன்), ஃபபியன் ஆலன், டுவைன் பிராவோ, ஃபிடெல் எட்வர்ட்ஸ், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெயில், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹோசைன், எவின் லூயிஸ், ஒபட் மெகாய், ரோவ்மான் பவல், லெண்டில் சிம்மன்ஸ், கெவின் சின்க்லைர்.

ஒருநாள் அணி

பொலார்ட் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), ஃபபியன் ஆலன், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், அகேல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஜேசன் முகமது, நிகோலஸ் பூரண், ரொமாரியோ ஷெபர்ட், க்எவின் சின்க்லைர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து