முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்

செவ்வாய்க்கிழமை, 30 டிசம்பர் 2025      தமிழகம்
UPI

சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நாட்டில் யு.பி.ஐ. மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவின் தேசிய பரிவர்த்தனை கழகம் (என்.பி.சி.ஐ.) யு.பி.ஐ.யை மேலாண்மை செய்கிறது. தொலைபேசி கட்டணம், மின்கட்டணம், கடன் கட்டணம் ஆகியவற்றை மாதந்தோறும் செலுத்த 'ஆட்டோ பே' என்ற வசதி உள்ளது. பீம்.யு.பி.ஐ., கூகுள் பே, போன் பே போன்ற பல்வேறு செயலிகளில் இருக்கும் ஆட்டோ பே வசதியை ஒரே இடத்தில் மேலாண்மை செய்யும் வசதியை என்.பி.சி.ஐ. கொண்டு வந்துள்ளது. இதற்காக ஒரு தளத்தை உருவாக்கி இருக்கிறது. upihelp.npci.org.in என்ற ஒரே தளத்தில் அனைத்து யு.பி.ஐ. செயலிகளில் இருக்க கூடிய ஆட்டோபேவையும் பார்வையிட்டு மேலாண்மை செய்யலாம். இந்த வசதி வருகிற 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து