முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 30 டிசம்பர் 2025      தமிழகம்
Train 2023-04-06

சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு ரயில்வேக்கான புதிய கால அட்டவணை வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதில் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய பயணிகள் ரயில், ரயில் சேவை நீட்டிப்பு, புதிய நிறுத்தங்கள், ரயிலின் வேகம் அதிகரிப்பு, கூடுதல் பெட்டிகள் இணைப்பு உள்ளிட்ட மாற்றங்கள் அடங்கிய புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நடப்பாண்டில் 8 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

4 ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 ரயில்கள் மாற்று நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. 44 எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 102 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. 22 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 வந்தே பாரத் ரயில்களில் கூடுதாலாக 40 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. 46 எக்ஸ்பிரஸ் ரயில், 27 பயணிகள் ரயில்களில் 62 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் 65 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், 14 பயணிகள் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி, 5 நிமிடங்கள் முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் சேமிக்க முடியும். குறிப்பாக, செங்கோட்டை- சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (12662) வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர்-குருவாயூர் (16127) 20 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப் படவுள்ளது. கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16102) 85 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும், கோவை-ராமேசுவரம் ரயில் (16618) 55 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் (20692) 45 நிமிடம் முன்னதாகவும், தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (12694) முத்துநகர் எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் முன்னதாகவும் சென்றடையும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இதேபோல, நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரயில் 35 நிமிடம் முன்னதாகவும், மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயில் 15 நிமிடம் முன்னதாகவும் செல்லும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் பயண நேரம் சேமிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து