முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல்; உயர் திறன் ஏர் பில்டர் மாஸ்க் அணிந்து பாராளுமன்றம் வந்த எம்.பி.

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

மாநிலங்களவை எம்.பி. நரேந்திர ஜாதவ் பாராளுமன்றத்திற்கு உயர் திறன் கொண்ட ஏர் பில்டர் மாஸ்க் அணிந்து வந்தார். இந்த மாஸ்க் 99.7 சதவீத அளவிற்கு கொரோனா கிருமிகள் பரவுதை தடுக்கும் திறன் கொண்டது என அவர் கூறினார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஜனாதிபதி உரையுடன் ஜனவரி 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இரு அவைகளிலும் நடந்தது. பட்ஜெட் மீதான விவாதங்களும் இரு அவைகளிலும் நடந்தன. முதல் அமர்வில் மக்களவை 99.5 சதவீதம் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டது என்றும், 50 மணி நேரம் கூட்டத்தொடரை நடத்தத் திட்டமிடப்பட்டதில் 49 மணி நேரம் 17நிமிடங்கள் கூட்டத்தொடர் நடந்தது என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

இந்நிலையில் 2-ம் கட்ட அமர்வு நேற்று தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கம் போல் மாநிலங்களவை காலை நேர அமர்விலும், மக்களவை மாலையும் திட்டமிடப்பட்டு இருந்தது. வழக்கம்போல் பாராளுமன்றத்திற்கு வந்த எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி முகவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.  மாநிலங்களவை எம்.பி. நரேந்திர ஜாதவ் பாராளுமன்றத்திற்கு உயர் திறன் கொண்ட ஏர் பில்டர் மாஸ்க் அணிந்து வந்தார். இந்த மாஸ்க் 99.7 சதவீத அளவிற்கு கொரோனா கிருமிகள் பரவுதை தடுக்கும் திறன் கொண்டது என அவர் கூறினார். எந்த கிருமிகளும் வாய் மற்றும் மூக்கு வழியாக நமது உடலுக்குள் செல்லாமல் தடுக்கும் திறன் கொண்ட நவீன முகவசம் இது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து