முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 8 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 71ஆயிரத்து 384 (9,71,384) ஆக  உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை  வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,   தமிழகத்தில் மேலும் 8,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்  மூலம் மொத்த பாதிப்பு 9,71,384 ஆக அதிகரித்துள்ளது.   

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 4,920 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம்  மொத்தம் 8,96,759 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த  பலி எண்ணிக்கை 13,032 ஆக உயர்ந்துள்ளது. இதில்  அரசு மருத்துவமனையில் 15 பேரும், தனியார் மருத்துவமனையில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.   

சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,636 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் மொத்தம் 2,77,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   தமிழகத்தில் இதுவரை 2,09,76,696 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று  மட்டும் 97,201 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.   

தமிழகத்தில் தற்போது 61,593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து