முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேக் வெட்டி கொண்டாட்டம்

சனிக்கிழமை, 17 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனி, தனது 200-வது ஐ.பி.எல் ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்ததையடுத்து அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

மும்பையில் நடந்த ஐ.பி.எல் டி-20 போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி விளையாடும் 200-வது போட்டியாகும். இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய டோனி, கேக் வெட்டி சக வீரர்களுக்கு ஊட்டிவிட்டார்.

_____________

அக்டோபரில் டி-20 உலக கோப்பை

சென்னை, மும்பை உள்ளிட்ட 9 நகரங்களில் டி-20 உலக கோப்பை தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

7-வது டி-20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதரபாத், தர்மசாலா, லக்ணோ ஆகிய நகரங்களில் லீக் சுற்று போட்டிகளையும், அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டியை நடத்தவும் பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது.

______________

பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா 

ஐ.பி.எல் டி-20 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை டி-20 போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க உள்ளது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ள டி20 உலகக் கோப்பையில் 45 மேட்ச்கள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதால், தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்தியா விசா வழங்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து அணி வீரர்களுக்கும் விசா வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். 

____________

மூத்த வீரர்களிடம் ஆசிபெற்ற சாஹர்

மும்பையில் நடைபெற்ற சென்னை - பஞசாப் போட்டியில் சி.எஸ்.கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் காலை தொட்டு கும்பிட்டார். இதன்பின் இந்த போட்டியில் தீபக் சாஹர் 4 விக்கெட்களை சாய்த்தார். தீபக் சாஹரின் அற்புதமான பந்துவீச்சு சி.எஸ்.கே-வின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. மேலும் ஷமி காலை தொட்டு கும்பிடும் தீபக் சஹாரின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீபக் சாஹர் பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹோடா, நிக்கோலஸ் பூரான் உள்ளிட்ட 4 விக்கெட்களை வீழ்த்தினார். சி.எஸ்.கே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தீபக் சாஹர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

_________

2 மைல்கல்லை எட்டிய ரோகித் !

ஐ.பி.எல் தொடரின் நேற்றை 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டி செய்ய தீர்மானித்தார். பின் களமிறங்கிய ரோகித் சர்மா, குயிண்டன் டி காக்  நிதானமாக விளையாட ரோகித் அடித்து விளையாட முயற்சித்தார். இருப்பினும் ரோகித் சர்மா 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் அவர் இரண்டு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார். ஒன்று, டி-20 போட்டிகளில் கேப்டனாக 4000 ரன்களை கடந்தார். மற்றொன்று, ஐ.பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் என்ற மைல்கல்லையும் இந்தப் போட்டியில் எட்டினார். ரோகித். அவர் ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை 217 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து