முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சிவன் கோவில்களில் இன்று சனி பிரதோ‌ஷ விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      ஆன்மிகம்
Image Unavailable

இன்று சனிப்பிரதோ‌ஷம் நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் அமைந்துள்ள சிவன் கோவில்களில் எப்போதும் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள். பிரதோ‌ஷ நாளில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.  கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழாக்களின் போது 100 பேருக்கு மேல் கூடக் கூடாது அனைத்து கோவில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று நடைபெறும் பிரதோ‌ஷ விழாவுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோ‌ஷ விழா எப்பொழுதும் வெகு சிறப்பாக நடத்தப்படும். ஆனால் இன்று நடைபெறும் பிரதோ‌ஷ விழாவுக்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தியாகராஜ சுவாமிகள் கோவிலிலும் பிரதோ‌ஷ விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  திருவொற்றியூர் தியாராஜ சுவாமிகள் கோவிலில் இன்று மாலை 4 மணியில் இருந்து 5.12 மணி வரை நந்திக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த பிரதோ‌ஷ நிகழ்ச்சி யூ-டியூபில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

பாடி சிவன் கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 5.30 மணி அளவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.  கோயம்பேட்டில் உள்ள குருங்காலீஸ்வரர் கோவில், தண்டையார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் வழிபடும் வகையில் பிரதோ‌ஷ விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதே போல் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள சிவாலயங்களில் இன்று சனி பிரதோஷ நிகழ்ச்சி அரசின் கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து