எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னையில் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை 3 மையங்களில் வருகிற 2-ம் தேதி நடைபெறுகிறது. ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட் டன. 1080 வாக்காளர்களுக்கு ஒரு வாக்கு சாவடி வீதம் பிரிக்கப்பட்டன. இதனால் 5,911 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடந்தன.
கடந்த கால தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டதால் ஓட்டு எண்ணக்கூடிய சுற்றுகள் அதிகரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஓட்டு எண்ணிக்கை நேரம் அதிகரிக்கிறது. ஒரு சுற்றுக்கு 30, 35 நிமிடங்கள் வரை ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அதிக வாக்குச்சாவடிகள் உள்ள தொகுதியாக வேளச்சேரி உள்ளது. அங்கு 459 வாக்குச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. பெரிய தொகுதியாக உள்ள பெரம்பூரில் 448 வாக்குச்சாவடிகள் இடம் பெற்றன. இதனால் இந்த 2 தொகுதிகளிலும் ஓட்டு எண்ணுவதற்கு அதிக நேரம் ஆகும் என்று தெரிகிறது.
வேளச்சேரி தொகுதியில் 33 சுற்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. அங்கு குறைந்தது ஓட்டு எண்ணுவதற்கு 17 மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதே போல பெரம்பூர் தொகுதியில் 32 சுற்றுகளை 16 மணி நேரத்தில் எண்ண வாய்ப்புள்ளது. கொளத்தூர், அண்ணா நகர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் 30 சுற்றுகள் வரை எண்ணுவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது.
அங்கு குறைந்தது 15 மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியை பார்வையிடும் அரசியல் கட்சி முகவர்கள் 72 மணி நேரம் முன்னதாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து சான்று பெற வேண்டும். சான்று பெறக்கூடியவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் பணியில் அனுமதிக்கப்படுவார்கள். 45 வயதுக்கு மேற்பட்ட முகவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இன்று அதற்கான முகாம் அந்தந்த மண்டலங்களில் நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025