முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடம்பரம் அல்ல; அவசியமானது: மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை தேவை : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

புதன்கிழமை, 19 நவம்பர் 2025      தமிழகம்
Thangam 2024-09-14

Source: provided

சென்னை : மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல அவசியமானது என்று தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை, கோவை நகரங்களுக்கு இது அவசியமான உள்கட்டமைப்புத் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்ககான மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான திட்ட விரிவாக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு விரிவான திட்ட அறிக்கையைக் கேட்டு அதனைத் திருப்பியனுப்பியிருக்கிறது. 

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- மதுரையும், கோவையும் தமிழ்நாட்டின் பெருமைமிகு நகரங்கள். இவை இரண்டும் இந்தியாவின் வேகமாக வளரும்  நகரங்களில் முக்கியமானவை. இந்நகரங்களுக்கு மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல; அவசியமான உள்கட்டமைப்புத் தேவை. 

மக்கள் நெருக்கடியைக் குறைப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, என அனைத்துக்கும் மெட்ரோ இன்றியமையாதது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாகுபாட்டை எதிர்த்து, தமிழ்நாடு மக்களின் நியாயமான உரிமைக்காகவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்கக் கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய குரலுக்கு முழு ஆதரவு தெரிவிப்போம் எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து