Idhayam Matrimony

கடலில் மாயமான நீர்மூழ்கி கப்பலில் இருந்த 53 வீரர்களும் உயிரிழப்பு : இந்தோனேஷிய அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பான்யூவாங்கி : கடலில் திடீரென மாயமான இந்தோனேஷிய நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் கிடைத்ததை தொடர்ந்து அதில் இருந்த 53 வீரர்களும் ஆக்சிஜன் இல்லாமல் இறந்திருக்க கூடும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

இந்தோனேஷிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் கே.ஆர்.ஐ. நங்காலா 402, கடந்த புதன்கிழமை கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பாலி தீவின் வடக்கே திடீரென காணாமல் போனது.

அமெரிக்காவின் பி-8 பொசெய்டன்  கண்காணிப்பு விமானம், 20 இந்தோனேஷிய கப்பல்கள், சோனார் பொருத்தப்பட்ட ஆஸ்திரேலிய போர்க்கப்பல், 4 இந்தோனேஷிய விமானங்கள், இந்திய கப்பல் ஆகியவற்றின் உதவியுடன் அதை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. 

இந்நிலையில், அந்த நீர்மூழ்கி கப்பலில் இருக்கும் ஆக்சிஜனை கொண்டு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வரை மட்டுமே வீரர்கள் தாக்கு பிடிக்க முடியும் என அதிகாரிகள் முன்பே கூறியிருந்த நிலையில், இது குறித்து பாலியில் இந்தோனேஷிய கடற்படை தளபதி யூடோ மர்கானோ கூறுகையில்,

காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் சில பாகங்களை மீட்புப் படையினர் கண்டெடுத்து உள்ளனர். அவற்றை ஆதாரங்களாக வைத்து, கப்பலை தேடும் பணி நடந்தது. கடலுக்கு அடியில் 600 முதல் 700 மீட்டர் ஆழத்தில் கப்பல் மூழ்கி இருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.  இது வழக்கமாக நீர்மூழ்கி கப்பல்கள் கடலுக்கு அடியில் பயணிக்கும் 200 மீட்டர் ஆழத்தை விட பல மடங்கு ஆழமாகும்.

இதனால், அந்த ஆழத்தில் அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதால், நீர்மூழ்கி கப்பல் தரையில் மோதி சேதமாகி இருக்கலாம். மேலும், ஆழத்தில் ஏற்படும் அழுத்தம், ஆக்சிஜன் இல்லாமை போன்ற காரணங்களால் நீர்மூழ்கி கப்பலில் இருந்த 53 வீரர்களும் இறந்திருக்க கூடும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து