முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே துறையில் பணியாற்றும் 93,000 ஊழியர்களுக்கு கொரோனா

திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் 93,000 ஊழியர்களுக்கு 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை படுவேகமாகப் பரவி வருகிறது, பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல வழிகளைக் கையாண்டு முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே துறையையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. கரோனா வைரஸால் 93 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே வாரியத் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான சுனீத் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொது ஊரடங்கு காலத்திலும் ரயில்வே ஊழியர்கள் திறம்பட பணியாற்றி வந்தனர். இந்நிலையில் 93 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ரயில்வே நடத்தி வரும் 72 மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கை வசதிகள் ஊழியர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான சிகிச்சையை ரயில்வே வழங்கும். கரோனாவால் பாதிக்கப்பட்டோர் அருகில் உள்ள ரயில்வே மருத்துவ மனைகளை அணுகலாம். 

பாதிக்கப்பட்ட அனைவருமே மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள ரயில்வே டாக்டர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.ரயில்வேயில் முன்களப் பணியாளர்களாக இருக்கும் பராமரிப்பாளர்கள், டிரைவர்கள், பரிசோதகர்கள், ரயில்வே நிலைய ஊழியர்களுக்கு அடிக்கடி மருத்துவப் பரிசோதனையை நடத்தி வருகிறோம். இவ்வாறு சுனீத் சர்மா கூறினார்.

இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 3.52 லட்சத்தைக் கடந்தது, கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேர் கொரோனாவில் பலியாகியுள்ளனர். ஹரியாணா ஹிசார் மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் 5 பேர் மரணமடைந்ததையடுத்து மக்கள் போராட்டம் நடத்தினர். 

இதற்கிடையே கோவிட் 2வது அலைக்கு எதிராக நாடு போராடிக் கொண்டிருப்பதால், கோவிட் சிகிச்சைக்கான ரயில் பெட்டிகளில் கூடுதல் வசதிகள் செய்து பல மாநிலங்களுக்கு ரயில்வே அனுப்பி வருகிறது.

இவற்றை லேசான அறிகுறியுள்ள கோவிட் நோயாளிகளுக்கு தனிமை வார்டுகளாக பயன்படுத்த முடியும். தற்போதைய கோடைக்காலத்தை சமாளிக்க இந்த ரயில் பெட்டிகளில் கூலர்கள், சணல் விரிப்புகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 4000 கோவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் 64,000 படுக்கைகளுடன் நாட்டின் பல ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து