முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரி - விமர்சனம்

திங்கட்கிழமை, 6 மே 2024      சினிமா
Sabari-Review 2024-05-06

Source: provided

கணவரை விவாகரத்து செய்து விட்டு தனது பெண் குழந்தையுடன் ஐதராபாத்துக்கு வேலை தேடி வருகிறார் வரலட்சுமி. வரலட்சுமியின் மகள் தன்னுடைய குழந்தை என்று மைம் கோபி சொந்தம் கொண்டாடுவதோடு, சிறுமியை கடத்தி வைத்துக்கொண்டு வரலட்சுமியிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்கிறார்.

குழந்தையை சொந்தம் கொண்டாடும் மைம் கோபி, அதே குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்பது ஏன்?, தனது மகளை மீட்க போராடும் வரலட்சுமி சரத்குமார் எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன? அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ‘சபரி’-யின் கதை.

வரலட்சுமியின் கணவராக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன், வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் ஷசாங் இருவரும் கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். வரலட்சுமியின் மகளாக நடித்திருக்கும் பேபி நிவேக்‌ஷாவின் நடிப்பில் குறையில்லை. ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. கோபி சுந்தரின் இசை பாராட்டுக்குரியது. 

ஆபத்தில் இருந்து தன் குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாயின் போராட்டத்தை மென்மையாகவும், அதிரடியாகவும் சொல்லியிருப்பது ரசிகர்களுக்கு ஆறுதல் மருந்து..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து