முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா மேலாண்மை உதவி: ராணுவ தலைமை தளபதி பிரதமர் மோடியுடன் சந்திப்பு

வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா மேலாண்மை உதவி பணிகளை பற்றி ராணுவ தலைமை தளபதி நரவானே பிரதமர் மோடியை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

நாட்டில் நாள்தோறும் உச்சம் கண்டு வரும் கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாமல் மருத்துவ துறை திக்குமுக்காடி வருகிறது.  ஒருபுறம் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால், மறுபுறம் அவர்களுக்கு தேவையான படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை போதிய அளவுக்கு மக்களுக்கு கிடைக்காத சூழல் உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியை இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவானே நேற்று நேரில் சந்தித்து பேசினார்.  இதில், கொரோனா மேலாண்மை பணிகளுக்கு உதவுவதற்கு ராணுவம் எடுத்து வரும் பல்வேறு திட்டங்களை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் பொதுமக்களுக்காக மருத்துவமனைகளை ராணுவம் திறந்து வருகிறது.  மக்கள் தங்கள் அருகாமையிலுள்ள மருத்துவமனைகளை அணுகலாம் என்று நரவானே பிரதமர் மோடியிடம் விளக்கி கூறியுள்ளார். 

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் வாகனங்களை கையாள சிறப்பு திறன்கள் தேவை.  இந்த பணிகளை மேற்கொள்பவர்களுக்கு உதவியாக ராணுவம் செயல்படுகிறது என்றும் நரவானே பிரதமரிடம் தெரிவித்து உள்ளார்.  இதனை பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து