முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றி கொண்டாட்டத்தை உடனடியாக தடை செய்க: தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தை உடனடியாக தடை செய்ய உத்தரவிட வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் அவசர கடிதம் அனுப்பியது. 

தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து  மாநிலங்களில் முன்னணியில் உள்ள கட்சியின் தொண்டர்கள் தேர்தல் வெற்றியை கொண்டாட பொது இடங்களில் கூடினர். 

இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தை உடனடியாக தடை செய்ய உத்தரவிட வேண்டும் என அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அவசர கடிதம் அனுப்பியது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னதாக தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து