முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெபாசிட் இழந்தார் பிரேமலதா : தொண்டர்கள் அதிர்ச்சி

திங்கட்கிழமை, 3 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

விருத்தாசலம் : விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தார். இதனால் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டார்.

ஏற்கனவே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி தொடங்கிய உடன், முதன் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன் அடிப்படையில், முதன் முறையாக தேர்தலில் நின்ற பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலத்தை தேர்வு செய்து அதில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் கார்த்திகேயன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராதாகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐ.ஜே.கே. பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதா மற்றும் இதர கட்சிகள், சுயேச்சைகள் 24 பேர் என மொத்தம் 29 பேர் தேர்தல் களத்தில் இருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், பிரேமலதா விஜயகாந்த் போட்டியிலேயே இல்லாமல் போனது, அவரது கட்சியினரிடையே அதிர்ச்சியை அளித்தது.

அதோடு 26 சுற்றுகள் நடந்த வாக்கு எண்ணிக்கையில் எந்த சுற்றிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., காங்கிரஸ் வேட்பாளர்களை விட கூடுதல் வாக்குகளை பிரேமலதா விஜயகாந்த் பெறவில்லை. 

காங்கிரஸ், பா.ம.க. வேட்பாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் பா.ம.க. வேட்பாளர் கார்த்திகேயனை விட 862 வாக்குகள் அதிகம் பெற்று மொத்தம் 77,064 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 

இதற்கிடையே பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் வாங்குவதற்கு 32 ஆயிரத்து 662 வாக்குகள் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் 25 ஆயிரத்து 908 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து