முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதன்கிழமை, 5 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது. 34.87 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 2,26,188 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,38,439 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியது.

இந்தியாவில்  ஒரே நாளில் 15,41,299 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 29 கோடியே 48 லட்சத்து 52 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 

தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மருத்துவ நிபுணர்கள் பலரும், 'கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.  தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான அமெரிக்க  ஜனாதிபதி ஆலோசகர் டாக்டர் பாசி, இந்தியாவில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது.

மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. மேலும் சில வாரங்களுக்கு முழு முடக்கத்தை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.  காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும், முழு ஊரடங்கின் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர்.

இரண்டாவது அலை தொடங்கிய போது, அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், முழு ஊரடங்கு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  முழு ஊரடங்கை அமல்படுத்தினால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அரசு தரப்பு தயங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து